லாகூர் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து லாகூர் விமான நிலையம் மூடப்படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில் உள்ள வால்டன் விமான நிலையத்திற்கு அருகில் இன்று காலை ட்ரோன் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில், லாகூர் விமான நிலையம் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
லாகூரில் நடத்தப்பட்டிருப்பது ட்ரோன் தாக்குதலா? இந்திய இராணுவத்தால் நடத்தப்பட்டதா? என்ற செய்திகள் இதுவரை அதிகாரபூர்வமாக இருதரப்பில் இருந்தும் உறுதி செய்யப்படவில்லை.