லா லிகா (LaLiga) கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றது.
குறித்த போட்டியில் பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் மோதின.
இந்த போட்டியில் ரியல் மாட்ரிட்டை 4-3 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணி வீழ்த்தியது.
ரியல் மாட்ரிட் அணியின் கைலியன் எம்பாப்பே, குறித்த போட்டியில் ஹாட்ரிக் கோல்களைப் பெற்றுக்கொடுத்த போதிலும், அந்த அணியினால் வெற்றியை அடையமுடியவில்லை.
பார்சிலோனா அணியின் சார்பில், ரஃபின்ஹா 2 கோல்களையும், லாமின் ய்மல் மற்றும் எரிக் கார்சியா தலா ஒரு கோலையும் பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.
இந்த வெற்றியின் மூலம், லா லிகா கால்பந்து தொடரின் புள்ளிப் பட்டியலில் பார்சிலோனா அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.