கொச்சிக்கடை, லூர்து மாவத்தைக்கு செல்லும் வீதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில் உயிரிழந்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் செலுத்தியவரே இவ்வாறு சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நீர்கொழும்பு, பெரியமுல்ல பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர்.
இதேநேரம் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தவர் பலத்த காயமடைந்து நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.