ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு நியாயமற்றது – அரசாங்கம் அதிருப்தி!

தீர்வு வழங்கப்பட்டுள்ள போதிலும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நியாயமற்ற முறையில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

இந்நிலையில் அவர்களின் இந்த கோரிக்கைகளுக்கு அமைச்சு மட்டத்தில் தீர்வுகள் வழங்கப்பட்டிருந்தும், அவை செயற்படுத்தப்படாமைக்கு திணைக்களத்தின் திறனற்ற தன்மையே காரணம் என போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடனடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது அரசாங்கத்தையும் மக்களையும் அசௌகரியப்படுத்துவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், ரயில் சேவையை பராமரிக்க அரசாங்கம் அனைத்து வகையிலும் தலையீடு செய்யும் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த

download (32)

டொராண்டோவில் கடும் வெப்பம்!

டொராண்டோ (Toronto) நகரில் வெப்ப அலை தொடரும் நிலையில், டொராண்டோ மாவட்ட பாடசாலைகள் குழுமம் (TDSB) பெற்றோர்களுக்கு கடிதம் ஒன்றை