ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரிக்கு திடீர் இடமாற்றம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பிரதான பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் அசோக ஆரியவன்ச, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இன்று (01) முதல் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த இடமாற்றத்திற்கான அனுமதி பொலிஸ் ஆணைக்குழுவிடம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பிரதான பொலிஸ் பரிசோதகர் அசோக ஆரியவன்ச, ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு பிரிவில் 23 ஆண்டுகள் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ampara

அம்பாறை காணாமல் ஆக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் குழப்பம்!

தமிழர் விரோத செயல்களுக்கும் தமிழர் தேச ஆக்கிரமிப்புகளுக்கும் எதிரான மக்கள் போராட்டம் தமிழர்களாக உணர்வோடும் உரிமையோடும் அணி திரள்வோம் என்ற

images

கல்விக்காக ஒதுக்கப்பட்ட மில்லியன் கணக்கான ரூபாய்கள் ‘இழக்கப்படும் அபாயத்தில்’

இலங்கையில் கல்வியில் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை அரசுக்கு வழங்கிய உதவியை முறையாகப் பயன்படுத்தாமையால், அது

download (1)

அயதுல்லா கமேனி கொல்லப்பட்டால் போர் முடிவுக்கு வரும்!

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டால் போர் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.