யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சி.வீ.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார். Frame மேலும் தெரிவிக்கையில், கட்சி மட்டத்தில் யாழ் மாநகர சபை மேஜர் தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது.
IFrame இதன்போது யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியின் பெயரும் யாழ் மாநகர சபையின் துணை மேயர் பதவிக்கு இம்மானுவேல் தயாளனின் பெயரையும் பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
யாழ் மாநகர சபைக்கான மேயர், பிரதி மேயர் தெரிவுகள் எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.