யாழ். பல்பொருள் அங்காடிக்கு தண்டம்!

யாழ்ப்பாணத்தில் பல்பொருள் அங்காடி ஒன்றின் உரிமையாளருக்கு 40ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

வண்டுமொய்த்த பொருட்கள் மற்றும் திகதி காலாவதியான பொருட்கள் என்பவற்றை விற்பனைக்காக வைத்திருந்த குற்றத்திற்காக மேற்படி தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால், உணவு கையாளும் நிலையங்கள், பூட் சிற்றிகள், பலசரக்கு வியாபார நிலையங்கள் என்பன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது, கோண்டாவில் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வண்டுமொய்த்த பொருட்கள் மற்றும் திகதி காலாவதியான பொருட்கள் என்பன மீட்கப்பட்டன.

அது தொடர்பில் நேற்றைய தினம் (29) யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது, உரிமையாளர் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த