யாழ். இந்திய துணைத் தூதரகத்தால் மீனவர்களுக்கு உதவித் திட்டம்

இந்திய துணை தூதரக ஸ்தானிகர் சாய் முரளி நேற்று (06) ஊர்காவற்துறை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் சமூகத்துக்காக மீன்பிடி வலைகளும் உலர்ந்த அத்தியாவசியப் பொருட்களும் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றார்.

ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் மற்றும் ஊர்காவற்துறை மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் துணை தூதரக ஸ்தானிகர் சாய் உரையாற்றினார்.

அவர் தெரிவிக்கையில்,

ஊர்காவற்துறை என்பது யாழ்ப்பாணத்தின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க, பண்பாட்டு செழுமை வாய்ந்த பகுதி. இந்திய ஆதரவுடன் நவீனமயமாக்கப்பட்ட குருநகர் மீன்பிடி வலை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட வலைகளை வழங்குவதில் மகிழ்ச்சி. உள்ளூரிலேயே தயாரிக்கப்படும் இவ்வலைகள் மூலம் பலன்கள் சமூகத்துக்குள் தங்குகின்றன.

உலர்ந்த அத்தியாவசியப் பொருட்களை வழங்கும்போது, இந்திய அரசின் பொது மக்களுக்கான சேவைத் திட்டங்களும் சமூக பங்களிப்பையும் அதிகரிக்கவுள்ளது.

வட மாகாண மக்கள், குறிப்பாக ஊர்காவற்துறை பகுதியில் வாழும் மக்களைப் பற்றிய சவால்கள் குறித்து தானறிந்திருப்பதாகவும், இந்தியா எப்போதும் அவர்களுடன் இருந்தது. நம்பிக்கையும், வாய்ப்புகளும், அமைதியும் நிரம்பிய எதிர்காலத்தை கட்டியெழுப்ப இந்தியா எப்போதும் நண்பனாகவும் துணைதாகவும் இருக்கும். என குறிப்பிட்டுள்ளார்.

வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்தியா மேற்கொண்டு வரும் வீடுகள், சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, கலாசாரம் மற்றும் திறனறிதல் பயிற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அபிவிருத்தித் திட்டங்களை அவர் மேலும் விளக்கினார்.

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்

donald-trump

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன – ட்ரம்ப்!

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை ஈரான் தனது அணு