யாழில் பலத்த காயங்களுடன் பெண்னொருவரின் சடலம் மீட்பு!

யாழில் வீடொன்றுக்குள் இருந்து பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் பருத்தித்துறை – தும்பளை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தும்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,மேற்படி பெண் வீட்டில் இருந்த வேளையில் வீட்டை கொள்ளையிடும் நோக்கில் வந்த நபரொருவர் பெண்ணை பொல்லால் கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளதாக காவல்துறையின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் 20 வயதுடைய பருத்தித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்