யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் 24ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அச்சுவேலி – தம்பாலை பகுதியை சேர்ந்த அப்புத்துரை கருணாகரன் (வயது 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபருக்கு கடந்த 21ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றையதினம் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நேற்றையதினமே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
நிமோனியா காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.