யாழில் துப்பாக்கிச்சூடு: மூவர் தப்பியோட்டம்!

யாழ்ப்பாணம் – வரணி பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பிச்சென்ற கனரக வாகனம் மீது கொடிகாமம் பொலிஸார் செவ்வாய்க்கிழமை (20) அதிகாலை 1 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

எழுதுமட்டுவாள் பகுதியில் கடமையிலிருந்த கொடிகாமம் பொலிஸார், பளை பகுதியில் இருந்து சட்டவிரோத மணல் உடன் சென்ற கனரக வாகனத்தை நிறுத்தியுள்ளனர். எனினும், கனரக வாகனம் நிறுத்தாது கொடிகாமம் பகுதியை நோக்கி தப்பி சென்றுள்ளது.

இதையடுத்து பொலிஸார் குறித்த கனரக வாகனத்தை தமது வாகனத்தில் துரத்திச் சென்றனர் எனினும், அந்த கனரக வாகனம், வேம்பிராய் நோக்கி மிக வேகமாக சென்றது.

இதன் போது லொறியில் பயணித்தவர்கள் பொலிஸாரின் வாகனத்தை நோக்கி டார்ச் லைட் மூலம் ஒளியை பாய்ச்சியிருந்தனர்.

இதனால் தமது வாகனத்தை செலுத்த முடியாத நிலையில் பொலிஸார் கனரக வாகனத்தின் டயர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதையடுத்து குறித்த கனரக வாகனத்தை நிறுத்திவிட்டு சாரதி உட்பட இரண்டு சந்தேக நபர்கள் தப்பியோடிவிட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த

download (32)

டொராண்டோவில் கடும் வெப்பம்!

டொராண்டோ (Toronto) நகரில் வெப்ப அலை தொடரும் நிலையில், டொராண்டோ மாவட்ட பாடசாலைகள் குழுமம் (TDSB) பெற்றோர்களுக்கு கடிதம் ஒன்றை