யாழில் திடீரென உயிரிழந்த இளைஞனின் மரணத்தில் மர்மம்!

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் திடீரென மர்மமான முறையில் நேற்று (18) உயிரிழந்துள்ளார். வண்ணார்பண்ணை, கே.கே.எஸ் வீதியடியைச் சேர்ந்த பாலச்சந்திரன் சசிராஜ் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞனின் தாய், தந்தை மற்றும் சகோதரர்கள் கடந்த 16ஆம் திகதி மட்டக்களப்புக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் குறித்த இளைஞனும் அவரது அண்ணாவும் மட்டுமே வீட்டில் இருந்தனர்.
பின்னர் ஒரு நாள் இரவு அவர்களது நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்து மதுபானம் அருந்தியுள்ளனர். அதன்பின்னர் நண்பர்கள் திரும்பிச் சென்றவேளை சகோதரர்கள் இருவரும் உறக்கத்துக்கு சென்றனர்.
பின்னர் குறித்த இளைஞனின் சகோதரன் அதிகாலை 1.30 மணியளவில் குறித்த இளைஞனை காணாத நிலையில் வெளியே வந்து பார்த்துள்ளார். இதன்போது குறித்த இளைஞன் கீழே விழுந்து காணப்பட்டார். பின்னர் சகோதரனும் உறவினரும் இணைந்து, அவசர நோயாளர் காவு வண்டி மூலம், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். மரணத்துக்கான காரணிகள் அறியப்படாத நிலையில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த