யாழில் கடத்தப்பட்ட பெண் மீட்பு!

யாழ்ப்பாணம் – மல்லாகம் நீதிமன்றத்துக்கு அருகில் வைத்து அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் தமது சொந்த விருப்பத்துக்கமையவே அவரது பெற்றோருடன் சென்றதாக காவல்துறையினரிடம் அறிவித்துள்ளார்.

மல்லாகம் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் வழக்கு ஒன்றில் பிரசன்னமாகி, நீதிமன்றிலிருந்து வெளியேறியிருந்த குறித்த பெண் கடந்த தினம் குழுவொன்றினால் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

அந்தப் பெண் கடத்தப்படும் காட்சி அடங்கிய காணொளி ஒன்று வெளியாகியிருந்த நிலையில், அதனடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெல்லிப்பளை காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக இரண்டு காவல்துறைக் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும், குறித்த யுவதி தமது சுய விருப்பத்துக்கமையவே தமது பெற்றோருடன் சென்றமை தெரியவந்துள்ளதாக தெல்லிப்பளை காவல்துறையின் பொறுப்பதிகாரி எமது செய்திச்சேவைக்குத் தெரிவித்தார்.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த