கண்டியின் பல்லேகல மைதானத்தில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற லெஜண்ட்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் போது மேட்ச் பிக்சிங்கை முன்மொழிந்த அணியின் உரிமையாளர் யோகி படேலுக்கு மாத்தளை மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன ரூ. 85 மில்லியன் அபராதமும் நான்கு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும், செவ்வாய்க்கிழமை (25) விதித்து உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட தரப்பினரின் சார்பாக இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவர் உபுல் தரங்காவுக்கு 2 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு மாத்தளை மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.