முல்லைத்தீவு பாடசாலையின் ஆசிரியர்களும் , மாணவர்களும் தெறிக்க ஓட்டம்!

முல்லைத்தீவு பாடசாலையில் குளவிகள் துரத்தி துரத்தில் கொட்டியதால் ஆசிரியர்கள் , மாணவர்கள் தலை தெறிக்க ஓடிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாடசாலை வளாகத்திற்குள் இன்று வெள்ளிக்கிழமை (30) காலை பாடசாலை சென்ற மாணவர்களையும் ஆசிரியர்களையும் துரத்தி துரத்தி தேன் குளவிகள் கொட்டியுள்ளது.

வலயமட்ட விளையாட்டுப்போட்டிகள்

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய வளாகத்திற்குள் கட்டிடம் ஒன்றில் தேன் குளவிகள் கூடுகட்டி இருந்துள்ளது. இன்றையதினம் (30) வலயமட்ட விளையாட்டுப்போட்டிகள் ஒட்டுசுட்டான் மகாவித்யாலய மைதானத்தில் இடம்பெற இருந்தது.

இந்நிலையில் திடீரென தேன் குளவிகள் கலைந்து பாடசாலை, மைதானத்தில் நின்றவர்களை துரத்தி கொட்டியுள்ளது.

இதனால் அச்சமடைந்த மாணவர்கள் பரவி பாய்ந்து ஒடியுள்ளனர். இப்பாடசாலையின் மாடிக் கட்டிடம் ஒன்றில் பலகாலமாக தேன் குளவிகள் கூடுகட்டி வாழ்வதாக கூறப்படுகிற நிலையில் மாணவர்கள் இன்று குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்