முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த நபர் நேற்று வயலில் வேலை செய்துகொண்டிருந்த போது மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
புதுக்குடியிருப்பு, மந்துவில் 8ஆம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.