ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் புதிதாக கொள்வனவு செய்த ஏர் பஸ் A330-200 விமானம் இன்று (21) மாலைதீவில் உள்ள மாலே சர்வதேச விமான நிலையத்திற்கு தனது முதல் பயணத்தை தொடங்கியது.
விமானம் இன்று பிற்பகல் 01.48 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.இந்த விமானம் இன்று மாலே சர்வதேச விமான நிலையத்திலும் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தொடர்பாடல் பிரிவு தலைவர் தலைவர் தீபால் பெரேரா தெரிவித்துளளார்.
இந்த புதிய அகலமான உடல் கொண்ட ஏர்பஸ் விமானம் கடந்த 4 ஆம் திகதி காலை பிரான்சில் உள்ள ஏர்பஸ் விமான உற்பத்தி தொழிற்சாலையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
விமானத்தின் பதிவு உட்பட பல முக்கியமான சர்வதேச சம்பிரதாயங்களை நிறைவு செய்த பின்னர், விமானம் அதன் முதல் விமான பயணத்தை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தொடங்கியது என குறிப்பிட்டார்.