மீன் லொரியிலிருந்து போதைப்பொருள் மீட்பு!

சுமார் 8 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு பிரிவு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபரிடம் இருந்து 02 கிலோகிராம் 40 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

மன்னாரில் இருந்து பேலியகொடை மீன் சந்தைக்கு மீன்களை ஏற்றிச் செல்லும் லொரிகளின் மீன் பெட்டிகளில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக
கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் தொடர்புடைய முக்கிய நபர் மீன் சந்தை ஊழியர் என்பதும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க