மீண்டும் மிரட்டும் கொரோனா!

கடந்த 2019ம் ஆண்டில் உலக நாடுகளை ஆட்டுவித்த கொரோனா வைரஸ் தொற்று, மீண்டும் ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் அதிகரித்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ஹாங்காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் உள்ள சுகாதார அதிகாரிகள் தொற்றுநோய்களின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு குறித்து எச்சரிக்கைகளை விடுத்துள்ளதுடன் தற்போது பரவி வரும் வைரஸின் அலைகள் பிராந்தியம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பருவகால எதிர்பார்ப்புகளை மீறி, பொதுமக்களுக்கு தற்போதைய அபாயங்களை நினைவூட்டுவதாகவும் அறிவுறுத்தியுள்ளது.

அந்தவகையில், ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய அலையாக உருவெடுத்துள்ளதுடன் அங்கு தற்போதுள்ள கொரோனா தொற்று சதவீதம் 11.4 என அறிவிக்கப்பட்டுள்ளது பலரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை மாதிரிகளில் பெரும்பாலானவற்றில் தொற்றுகள் உறுதியாக இருப்பது தெரியவந்துள்ளது.

அதேவேளை, சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 28 சதவீதம் கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூரில் மே முதல் வாரத்தில் 14,200 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதேபோல தாய்லாந்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை என்பதுடன் கொரோனா தொற்று தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் சுகாதார துறையினர் அறிவுறுத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

images

கல்விக்காக ஒதுக்கப்பட்ட மில்லியன் கணக்கான ரூபாய்கள் ‘இழக்கப்படும் அபாயத்தில்’

இலங்கையில் கல்வியில் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை அரசுக்கு வழங்கிய உதவியை முறையாகப் பயன்படுத்தாமையால், அது

download (1)

அயதுல்லா கமேனி கொல்லப்பட்டால் போர் முடிவுக்கு வரும்!

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டால் போர் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

download

அரசாங்கத்தை விமர்சித்தால் ஊழல்வாதிகளுக்கு வலு கிட்டும்!

உலகில் உள்ள 147 நாடுகளில், உலகின் மகிழ்ச்சியான மக்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை 133வது இடத்திற்குச் சரிந்துள்ளதாக பீல்ட் மார்ஷல்