மீண்டும் இனவாதத்தை தூண்டிவிட்டு ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் ராஜபக்‌ஷர்கள்!

ஆட்சி அதிகாரத்தைத் திரும்பவும் கைப்பற்றுவதற்காக ராஜபக்‌ஷ கும்பல் பழைய இனவாதப் பாதையை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளமை அண்மைக் கால செயற்பாடுகள் மூலம் தௌிவாகின்றது.

வடக்கில் தமிழ் மக்களின் காணி அபகரிப்புகள், வழிபாட்டு உரிமைகளை மறுக்கும் அதே நேரம் குறைந்த பட்ச அஞ்சலி நிகழ்வுகளுக்கும் எதிராக சிங்கள மக்கள் மத்தியில் இனவாதப் பிரச்சாரத்தை முன்னெடுப்பதில் ராஜபக்‌ஷ கும்பலின் அரசியல்வாதிகள் நேரடியாகவே களமிறங்கியுள்ளனர்.

அவர்களின் ஆசி பெற்ற ஞானசார கிறுக்கன் போன்றவர்களை களமிறக்கி முஸ்லிம் அடிப்படைவாதம், தீவிரவாதம் போன்ற பழைய பிரச்சாரத்தை மீண்டும் தூசு தட்டத் தொடங்கியுள்ளார்கள்.

அதே ​போன்று புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பங்களித்த தமிழ், முஸ்லிம் ராணுவ அதிகாரிகளின் விபரங்கள் தற்போது வேண்டுமென்றே மறக்கடிக்கப்படுகின்றது. அதற்குப் பதில் அடையாளம் தெரியாத சிப்பாய் (நாந்துனன செபலா), கேணல் லலித் எஸ். ஜயசிங்க போன்ற பெயர்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

புலிகளின் விமானப்படைத் தளபதி கேணல் சங்கரின் கொலை, கங்கை அமரன் கொலை என்பன ராணுவ உளவுப் பிரிவில் இருந்த லெப்டிணன்ட் கேணல் முத்தலிப்பின் துணிகர தாக்குதல் மூலம் நிகழ்த்தப்பட்டது. ஆனால் இப்போது அதையெல்லாம் லலித் எஸ். ஜயசிங்கவின் வீர சாகசங்களாக மடைமாற்றும் செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக காணப்படுகின்றது.

கேணல் பஸ்லி லாபிர், ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா, துவான் முத்தலிப், ரிஸ்வி மீடின் போன்ற சிறுபான்மை அதிகாரிகள் அண்மைக்காலமாக திட்டமிட்டே மறக்கடிக்கப்படுகின்றார்கள். சிறுபான்மை சமூகங்களும் இவர்களைப் பற்றிய விபரங்களை ஆவணப்படுத்தாமல் விட்டதும் பெரும்பான்மை இனவாதிகளுக்கு வசதியாகப் போயுள்ளது.

அவ்வாறு சிறுபான்மை அதிகாரிகளை மறக்கடித்து யுத்த வெற்றி முழுக்க சிங்கள ராணுவத்தின் கெட்டிக்காரத்தனம் என்று வீரம் ​பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் இவர்கள் கொண்டாடும் சரத் பொன்சேகாவும், ஜானக பெரேராவும் ஓயாத அலைகளின் போது கால்கள் பிடறியில் அடிபட பின் வாங்கி ஓடியதோ, ஆனையிறவு முகாம் வீழ்ச்சியில் சரத் பொன்சேகாவின் கோழைத்தனம் பற்றியோ எழுதப் போனால் இவர்களின் வரலாறு நாறிப் போகும்.

உண்மையில் யுத்த வெற்றியில் ராணுவத்தின் விசேட படையணி (எஸ்.எப்)இற்கு 60 வீத பங்களிப்பு உள்ளது. அந்தப் படையணி பாக்கிஸ்தான் உருவாக்கிக் கொடுத்தது. கேணல் பஸ்லி லாபிர் போன்றவர்கள் தங்கள் தனித்திறமைகளால் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு வலிமை பெற்றது.

இப்படியான வரலாறுகளை மறைத்துவிட்டால் சிங்கள இனவாத உணர்வுகளைத் தட்டியெழுப்பி, சிங்கள மக்களை ஓரணியில் திரட்டி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி விட முடியும் என்று ராஜபக்‌ஷ கும்பல் நினைத்துக் கொண்டிருக்கின்றது. ஒருசில முஸ்லிம்களும் ஏமாந்து போய் அவர்களின் பின்னால் அலைந்து கொண்டிருக்கின்றார்கள். அதுதான் மிகப் பெரும் கவலைக்குரிய விடயமாகும்.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த