மியன்மார் சைபர் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 15 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து அரசின் தலையீட்டுடன் வெளிவிவகார அமைச்சு மற்றும் தாய்லாந்திலுள்ள இலங்கை தூதரகம் இணைந்து இதற்கான பணியை முன்னெடுத்திருந்தது.
விடுவிக்கப்பட்ட 15 மாணவர்கள் மியன்மார் – தாய்லாந்து எல்லையிலுள்ள மியாவாதி பகுதியின் மிசோட்டிலுள்ள தாய்லாந்து இலங்கை தூதரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.