மின்னல் தாக்கி 09 பேர் பலி!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கம் காரணமாக ஆறு பெண்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

நேற்று பிற்பகல் நடந்த மின்னல் தாக்குதல் சம்பவங்களில் கோராபுட் மாவட்டத்தில் மூவரும், ஜாஜ்பூர் மற்றும் கஞ்சம் மாவட்டங்களில் இருவரும்,
தேன்கனல் மற்றும் கஜபதி மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கோராபுட் மாவட்டத்தில் உள்ள பரிதிகுடா கிராமத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் வயலில்
வேலை செய்து கொண்டிருந்தபோது பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக தற்காலிக குடிசையில் தஞ்சம் புகுந்தனர்.

இதன்போது குடிசையில் மின்னல் தாக்கியதில் மூன்று பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஜாஜ்பூர் மாவட்டத்தில், தர்மசாலா பகுதியில் 12 மற்றும் 15 வயதான சிறுவர்கள் வீட்டிற்கு வெளியே
நின்று கொண்டிருந்த போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பரிதா கிராமத்தில் சிறுவனொருவனும் பெலகுந்தா பகுதியில் உள்ள பழத்தோட்டத்தில் மாம்பழங்களை சேகரிக்கும்
போது 23 வயது பெண் ஒருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக, கோராபுட், கட்டாக், குர்தா, நயாகர், ஜாஜ்பூர், பாலசோர் மற்றும் கஞ்சம் உள்ளிட்ட ஒடிசாவின் பல மாவட்டங்களில்
நேற்று பிற்பகல்

இடியுடன் கூடிய மழை,பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் தொடர்பில் கோராபுட், கட்டாக், குர்தா, நயாகர், ஜாஜ்பூர், பாலசோர் மற்றும் கஞ்சம் உள்ளிட்ட ஒடிசாவின் பல மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்றைய தினம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்