முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை முன்னிலையான போதே இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், சீன நிறுவனமொன்றிலிருந்து தரமற்ற கரிம உரங்களை கப்பலில் இறக்குமதி செய்த வழக்கில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.