“மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்..” வைரலாகும் கெனிஷாவின் இன்ஸ்டா பதிவு!

நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி இடையேயான பிரச்சனை, தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், அவரது தோழி கெனிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில், முக்கிய நடிகராக இருக்கும் நடிகர் ரவி மோகன் (எ) ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிந்திருக்கிறார். இது குறித்த அறிவிப்பினை அவர் கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தார்.

இதற்கு காரணமாக, தான் மனம், உடல் மற்றும் நிதி ரீதியாக மனைவி மற்றும் குடும்பத்தாரால் துன்புருத்தப்பட்டதாக கூறியிருந்தார். இதற்கிடையே வந்தவர்தான், கெனிஷா ஃப்ரான்ஸிஸ்.

தோழியாக அறிமுகமான இவர், இப்போது தன் வாழ்வின் ஒளியாகவும் இருப்பதாக ரவி மோகன் குறிப்பிட்டிருந்தார். ஆர்த்தியோ, தானும் தனது குழந்தைகளும் வாழும் வீட்டை விட்டு வெளியேறுமாறு ரவி மோகன் தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக கூறியிருந்தார்.

மேலும், வாழ்வின் ஒளி என்று குறிப்பிடும் அந்த நபர், விவாகரத்து பிரச்சனைகளுக்கு முன்பிருந்தே அவர் ரவி மோகனின் வாழ்வில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

கெனிஷா ஃபிரான்ஸிஸ், கோவாவை சேர்ந்த பாடகி ஆவார். இவரை ஸ்பிரிச்சுவல் தெரபிஸ்ட் என்றும் கூறுகின்றனர். ஆரம்பத்தில், ரவி மோகனுடன் கெனிஷா இருக்கும் புகைப்படம் வைரலான போது, இருவரும் டேட்டிங் செய்வதாக கூறப்பட்டது.

விவாகரத்துக்கு காரணம் இவர்தானோ என்றும் பலர் சந்தேகித்தனர். ஆனால், அதனை மறுத்த இவர்கள் தாங்கள் வெறும் நண்பர்கள் மட்டும்தான் என்று கூறிக்கொண்டனர்.

சில நாட்களுக்கு முன்னர் இருவரும் ஒரு திருமண நிகழ்வில், ஒரே நிற ஆடையில் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்விற்கு பிறகு கெனிஷாவை ஆன்லைனில் அனைவரும் வசைபாடி வந்தனர். “குடும்பத்தை பிரித்தவள், நல்ல குடும்பத்தில் பிறந்தவளா?” என்றெல்லாம் அவரை வாய்க்கு வராத வார்த்தையாக திட்டினர்.

கெனிஷா, சமீப காலங்களாக இணையத்தில் சில பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அப்படி, கடந்த சில நாட்களில் ரவி மோகன்-ஆர்த்தி பிரச்சனை தலைத்தூக்க தொடங்கியதற்கு பின்பு, அவர் தனது ஸ்டோரியில் சில பதிவுகளை வெளியிட்டிருக்கிறார்.

அதில், அவருக்கு சில நெட்டிசன்கள் சில மெசஜ்களை அனுப்பியிருக்கின்றனர். அவற்றை அவர் பகிர்ந்திருக்கிறார்.

“நீங்கள் என் உண்மையும் வேதனையும் அறியாத காரணத்தால், இப்படிப்பட்ட வார்த்தைகள் மற்றும் இன்னும் மோசமானவை என்மீது எளிதாக வீசப்படுகின்றன என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.

உங்களுடைய ஊகங்கள் எனக்கு வலிக்கின்றன என்பதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஒருநாள் நீங்கள் உண்மையை காணப்போகிறீர்கள் என்று நான் அனைத்து ஒளியின் கடவுள்களையும் வேண்டுகிறேன்.

அந்த நாள் வரும் போது, நான் தவறாக இருந்தால், உங்கள் கோபத்துக்கும் சட்டத்திற்கும் என் மீது தண்டனை ஏற்பதாக ஒப்புக்கொள்கிறேன்.

அந்த நாள் வரும் வரை, தயவுசெய்து ஒரு நிமிடம் என் மீது வெறுப்பு இல்லாமல் சுவாசிக்கச் சமாதானம் அளிக்க முடியுமா?” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தனக்கு யாரெல்லாம் தவறாக குறுஞ்செய்தி அனுப்பினார்களோ, அதை அனைத்தையுமே அவர் தனது ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார். இவர் கூறியிருக்கும் விஷயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்