பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை அவரது மனைவி பிரிஜிட் கண்ணத்தில் அறைவது போன்ற காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்ற தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வியட்நாமுக்கு விஜயம் செய்தபோது விமானத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. மக்ரோனின் மனைவி பிரிஜிட் மக்ரோனின் முகத்தில் அறைவதைக் காட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை, அதிகாரப்பூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, வியட்நாமின் தலைநகரான ஹனோய் விமான நிலையத்தில் மக்ரோன் தரையிறங்கினார்.
அவர் பயணித்த விமானத்தின் திறந்த மக்ரோன், இறங்குவதற்கு முன், அவரது முகத்தை நோக்கி இரண்டு கைகள் நீட்டுவதை கேமரா படம் பிடித்தது. அவரது மனைவி மக்ரோனின் முகத்தில் அறைந்ததாக வதந்தி பரவியது.
வைரலான இந்த காட்சிகள் தொடர்பில் இம்மானுவேல் மக்ரோனும், ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமான எலிசி அரண்மனையும் விளக்கமளித்துள்ளன.
விமானத்தில் நடந்தது ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் அவரது மனைவி பிரிஜிட்டிற்கும் இடையிலான பாசத்தின் வெளிப்பாடே தவிர அது ஒரு வாக்குவாதம் அல்ல என்று எலிசி அரண்மனை விளக்கமளித்துள்ளது.