மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரியொருவர், மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை, காவன்திஸ்ஸ பாடசாலைக்கு அருகில், கடந்த 16 ஆம் திகதி, மதுபோதையில் வாகனம் செலுத்தியற்காக, குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அம்பாறை பிரிவு போக்குவரத்து அதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
மேலும், கைதுசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி 23 ஆம் திகதி அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
அதன்படி, நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில், குறித்த பொலிஸ் அதிகாரியின் சேவையை இடைநிறுத்த மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.