மட்டுக்களப்பு அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்!

மாவட்ட அபிவிருத்திக்குழுவின் புதிய தலைவராக அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி நியமிக்கப்பட்டுள்ளார் அவர் தலைமையில்மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் புதன்கிழமை (11) அன்றுபழைய  மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர்  ஜே.ஜே முரளிதரன்  ஒருங்கமைப்பில்  நடைபெற்றது.

மாவட்ட அபிவிருத்தி  மீளாய்வு  கூட்டத்தில்  கல்வி, சுகாதாரம், விவசாயம்,மீன்பிடி, சட்டவிரோத மண் அகழ்வு, காட்டு யானை தாக்கம், டெங்கு நோயின் தாக்கம்,அரசாங்கத்தின் சத்துணவு திட்டம், வீடமைப்பு திட்டங்கள், போக்குவரத்து, போதைப்பொருள் பாவனை, போன்ற விடயங்கள் பற்றி ஆராயப்பட்டு முக்கிய தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்பட்டன.

மேலும் இவ்கூட்டத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபையின்உயர் அதிகாரிகள் அரச திணைக்களங்களின் தலைவர்கள்  பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முன்னர் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக இருந்த பிரதி அமைச்சர் அருண்ஹேமச்சந்திரன் வேலைப்பளு காரணமாக மாவட்டத்திற்கு புதிய மாவட்ட அபிவிருத்தி குழுதலைவராக அமைச்சர்  சுனில் ஹந்துனெத்தி நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்

donald-trump

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன – ட்ரம்ப்!

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை ஈரான் தனது அணு