மட்டக்களப்பு – கரடியனாறு பகுதியில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தக நிலையமொன்றுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக 6,000 ரூபாயினை இலஞ்சமாக பெற்ற போதே அவர் கைதாகியுள்ளார்.
கைதானவர் 54 வயதுடையவர் என இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.