போரை நிறுத்துமாறு இஸ்ரேலிடம் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தல்!

காஸா மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், போரை நிறுத்துமாறு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளார்.

மோதலை நிறுத்தும்படி இரு தரப்பையும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில், பணயக்கைதிகளை விடுவிப்பதில் ஹமாஸ் தாமதம் காட்டியதால், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், காஸாவில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், காஸா மீது கொஞ்சம் கருணை காட்டும்படியும் இஸ்ரேலிடம் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: காஸாவில் இருக்கும் மக்களின் தற்போதைய மனநிலையை என்னால் உணர முடிகிறது. நான் அதைப் பார்க்கிறேன். அந்த சத்தங்களும் எனக்கு கேட்கிறது. மக்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். உணவையும், மருத்துவப் பொருட்களையும் ஆயுதமாக்குவது மிகவும் தவறு.

அரசியல் தீர்வு மூலமே அமைதியை நிலைநாட்ட முடியும். இந்தப் போரினால் இஸ்ரேலும் பாதிக்கிறது. உங்களால் கருணை காட்ட முடியும் என்றால், அது உங்களுக்கும், பலஸ்தீனர்களுக்கும் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே நல்லது, எனக் கூறினார்.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்