பொலிஸாரை தாக்கிய ஐவருக்கு விளக்கமறியல்!

பேருவளை – மீன்பிடி துறைமுகப் பகுதியில் பொலிஸ் அதிகாரிகளை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று (10) மாலை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், களுத்துறை நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவான், 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

நேற்று (09) இரவு, பேருவளை மீன்பிடி துறைமுகத்துக்கு அருகில், பொலிஸாருக்கும் பௌத்தக் கொடிகளை ஏற்றி வைத்திருந்த ஒரு குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதன்போது ஏற்பட்ட உரையாடல் தீவிரமடைந்ததை அடுத்து, அந்தக் குழு பொலிஸாரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பின்னர், சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குழுவொன்று லொறியில் ஏறி பௌத்த கொடிகளை ஏற்றியவாறு இருந்தபோது, பொலிஸார் வீதியை மறைக்க வேண்டாம் என அவர்களுக்கு அறிவுறுத்திய பின்னர் இந்தச் சம்பவம் ஏற்பட்டது.

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்

donald-trump

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன – ட்ரம்ப்!

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை ஈரான் தனது அணு