பொலிஸாரின் கையை கடித்த நபர்!

கேகாலை, ரன்வல பகுதியில் பொலிஸ் அதிகாரியின் கையைக் கடித்து காயப்படுத்திய சந்தேக நபர் கேகாலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை (09) இரவு இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர் கேகாலை – ஹெட்டிமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடையவர் ஆவார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சம்பவ தினத்தில் , கேகாலை, ரன்வல பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர், இரவு 10 .00 மணியளவில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்த முயன்றுள்ளனர்.

எனினும் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் பொலிஸ் உத்தரவையும் மீறி மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றுள்ளனர். பின்னர் பொலிஸ் அதிகாரிகள் இருவரும் பொலிஸ் மோட்டார் சைக்கிளில் சந்தேக நபரை துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.

இதன்போது சந்தேக நபர் , கேகாலை பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வலது கையைக் கடித்து காயப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன் பொலிஸாரின் விசாரணையில் சந்தேக நபர் மதுபோதையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்