பொதுமக்களுக்கும் சட்டவாக்கத்துக்கும் இடையிலான தொலைவைக் குறைப்பது தொடர்பில் கவனம்!

திறந்த அரச பங்குடமையின் அங்கத்துவத்தை செயற்படுத்தி பொதுமக்களுக்கும் சட்டவாக்கத்துக்கும் இடையிலான தொலைவைக் குறைப்பதற்கு விரிவாகப் பணியாற்றுவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் கவனம் செலுத்தப்பட்டது.

ஒன்றியத்தின் இணைத்தலைவர்களான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் (வைத்தியர்) கிரிஷாந்த அபேசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் அண்மையில் (06) ஒன்றியம் கூடிய போதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, மிகவும் வினைத்திறனாகப் பணியாற்றுவதற்குத் திறந்த அரச பங்குடமையின் அங்கத்துவத்தை செயற்படுத்துவதற்கு ஒன்றியத்தினால் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, டிரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் (Transparency International) மற்றும் சர்வோதய ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கும் அவர்களின் அனுவபம் மற்றும் அறிவை அடிப்படையாகக் கொண்டு திறந்த அரச பங்குடமையின் அங்கத்துவத்தை செயற்படுத்துவதற்குத் தேவையான அடிப்படை புரிதலைப் பெற்றுக்கொள்வதற்கும் ஒன்றியத்தின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகளை மிகவும் வினைத்திறனாக முன்னெடுப்பதற்குத் தேவையான கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இங்கு ஒன்பதாவது பாராளுமன்றத்தில் செயற்பட்ட திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பிலும் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அத்துடன், ஒன்றியத்தினால் விரைவாக மேற்கொள்ளக்கூடிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்கமைய, உள்ளூராட்சி மன்றங்களில் குழுக்களை நியமிக்கும் போது சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்தவர்களை நியமிப்பதற்குக் காணப்படும் சட்டரீதியான ஏற்பாடுகள் பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளை அறிவுறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. அது தொடர்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி தலைமையில் உப குழுவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டது.

மேலும், ஒன்றியத்தினால் மேற்கொள்ள எதிர்பார்க்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் தேவையான பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிறுவனங்களுடன் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த ஒன்றியத்தின் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்