பேரழிவை சந்தித்த டெக்ஸாஸ் மாநிலம் ,குழந்தைகள் பலரை காணவில்லை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கெர் கௌண்டி பகுதியில் ஏற்பட்ட சீரற்ற வானிலை மற்றும் வெள்ளத்தால் பதின்மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 20 குழந்தைகள் காணாமல் போனதை உறுதிப்படுத்திய டெக்சாஸ் மாநில பதில் ஆளுநர் டான் பெட்ரிக் மேலும் பலரைக் காணவில்லை என தெரிவித்துள்ளார்.

“45 நிமிடங்களுக்குள், குவாடலூப் நதி 26 அடி உயர்ந்து, அது ஒரு அழிவுகரமான வெள்ளம், சொத்துக்களையும் துரதிர்ஷ்டவசமாக உயிர்களையும் அது பறித்தது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அந்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் சுமார் 750 குழந்தைகள் கலந்து கொண்ட நிலையில் இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளது.

குழந்தைகள் பெற்றோரைத் தொடர்பு கொள்ளாவிட்டால், அவர்களின் குழந்தையும் காணாமல் போனதாக கணக்கிடப்படும்.

பொது மக்களை மீட்க14 ஹெலிகாப்டர்கள், 12 ட்ரோன்கள், ஒன்பது மீட்புக் குழுக்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் உள்ளனர், சுமார் 400-500 பேர் அந்த பகுதியில் உள்ளனர்

இரவு முழுவதும் தேடுதல் தொடரும் என்று மற்றொரு அதிகாரி உறுதிப்படுத்தினார்.

download (5)

இராணுவத் தாக்குதலில் 29 பலூச் படையினர் மரணம்!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில்

74ca9f53-2025-48bf-8ae8-09650e4277e6

வடக்கின் தொழில் பயிற்சி நிலையங்களில் வௌி மாகாணத்தவர்களே அதிகம் கற்கிறார்கள்!

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக

5480e5b4-dfa4-4a08-8cf0-c65a4c6f2f28

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முறையாக ஆசனம் ஒதுக்கப்படவில்லை – எம்.பிக்கள் குற்றச்சாட்டு!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தவிசாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையாக ஆசனம் ஒதுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன்,