இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை அவரது ரசிகர்கள் பெரிய பாய் என்று பாசப்பெயர் கூறி அழைத்து வரும் நிலையில் அதனை தான் விரும்பவில்லை என்றும் அந்த பெயர் கூறி தன்னை அழைக்க வேண்டாமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரபல தொகுப்பாளினி டி.டியுடன் நடைபெற்ற நேர்க்காணல் ஒன்றில் அவர் பெரிய பாய் என்று கூறிய போது ” என்னை அப்படிச் சொல்ல வேண்டாம். எனக்கு அது பிடிக்கவில்லை. கசாப்புக் கடைக்காரரை கூப்பிடுவது போல் இருக்கிறது” என்றார்.
அதேநேரம், அவரது முன்னாள் மனையியான சைரா பானு மற்றும் அவரது பிள்ளைகளிடம் அவர்களுக்காக நேரம் ஒதுக்க முடியாத அளவு வேலைகளுடன் ஒன்றிப் போய் இருப்பதால் அவர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அந்த நேர்க்காணலில் கூறினார்.