புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் மாணவி அவதி!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் பல பிரச்சனைகள் தொடர்ந்து காணப்பட்டு வருவதோடு நோயாளிகள் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அந்த வகையில் இன்றய (11) தினம் பாடசாலை மாணவி ஒருவர் தலை வலி மற்றும் வாந்தி மயக்கம் போன்ற நோயால் வைத்தியசாலையில் அனுமதித்த போது மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுமதிக்க முடியாமல் வைத்தியசாலை நிர்வாகம் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது

இன்று காலை உடையார் கட்டு மத்திய கல்லூரிக்கு கல்வி கற்க சென்ற குறித்த மாணவி உடல்நலக்குறைவால் பாடசாலையில் இருந்து காலை பெற்றோரிடம் பாடசாலை நிர்வாகத்தினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

ஒப்படைக்கப்பட்ட மாணவியுடன் பெற்றோர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக பாடசாலை மாணவி மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுமதிக்க வேண்டிய தேவை காணப்பட்டதுடன் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் தேவைப்பட்டதன் காரணத்தால் மாணவியும் பெற்றோரும் காத்திருந்துள்ளனர்.

சுமார் 3 மணிநேரத்தின் பின் மாணவியும் தந்தை வைத்தியசாலை வைத்தியரிடம் சென்று தாம் காத்திருப்பதற்கான காரணத்தை கேட்ட போது வைத்தியர் வைத்தியசாலையில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவித்துள்ளார்

இதன் பின் மாணவியும், தந்தை தனது தொந்த விருப்பின் பெயரில் மாணவியை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றுள்ளார்

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த