புதிய பாப்பரசர் தேர்வு மாநாடு இன்று!

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் (வயது 88) கடந்த மாதம் 21ஆம் திகதி உடல்நல குறைவால் மரணம் அடைந்தார். பாப்பரசர் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் மாநாடு இன்று (07) தொடங்கும் என்று வாடிகன் அறிவித்தது. அதன்படி இன்று பாப்பரசர் தேர்வு தொடங்குகிறது. வாடிகனில் உள்ள 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாரம்பரியமிக்க சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய ஆலோசனை கூட்டமும், வாக்கெடுப்பும் நடைபெறுகின்றது.

இதற்காக வாடிகனில் 250 கார்டினல்கள் குவிந்துள்ளனர். ஆனால் 80 வயதிற்குட்பட்ட 133 கார்டினல்கள் மட்டுமே புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் தேர்தலில் பங்கேற்று வாக்களிப்பார்கள். வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ள கார்டினால்கள் சிஸ்டைன் தேவாலயத்திற்குள் செல்வதற்கு முன்னர், பைபிள் மீது கை வைத்து இரகசிய காப்பு உறுதி மொழி எடுத்துக்கொள்வார்கள்.

கார்டினல்களை தவிர இரண்டு அவசர கால வைத்தியர்கள், கார்டினால்களுக்கு சமைக்கும் நபர்கள் மட்டுமே சிஸ்டைன் தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். கார்டினல்கள் உள்பட சிஸ்டைன் தேவாலயத்திற்குள் செல்லும் அனைவரும் வெளி உலக தொடர்பை நீக்க வேண்டும்.

இதையடுத்து வாடிகனில் தொலைத் தொடர்பு சேவை துண்டிக்கப்படும். சிஸ்டைன் தேவாலயத்திற்கு உள்ளேயும் வெளி பகுதியிலும் தொலைப்பேசி மற்றும் இணைய சிக்னல்களை தவிர்க்க ஜாமர்கள் பொருத்தப்பட்டிருக்கும். கார்டினல்கள் தங்கும் மாளிகையிலும் தொலைக்காட்சி, வானொலி, செய்திதாள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய பாப்பரசர் ஆக தேர்வு செய்யப்படுபவருக்கு 3இல் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்கும் வரை பல்வேறு கட்ட வாக்கெடுப்பு நடை பெறும். ஒவ்வொரு கார்டினல் வாக்காளரும் தாம் விரும்பும் வேட்பாளரின் பெயரை வாக்குச் சீட்டுகளில் எழுதி தங்களது வாக்குகளை அளிப்பார்கள்.

இந்த நடைமுறைகளுக்கு பின்னர் சிஸ்டைன் தேவாலயத்தில் அண்மையில் பொருத்தப்பட்ட புகை போக்கியில் கருப்பு நிற புகை வெளியிடப்பட்டால் பாப்பரசர் தேர்வு செய்யப்படவில்லை என்பதை குறிக்கும்.

வெள்ளை நிற புகை வந்தால் புதிய பாப்பரசர் தேர்வு செய்யப்பட்டதை குறிக்கும். பாப்பரசர் தேர்வு செய்ய கர்டினல்கள் வாக்கு செலுத்திய சீட்டுகள் உடனடியாக எரிக்கப்படும்.

புதிய பாப்பரசர் தேர்வு போட்டியில் இத்தாலியை சேர்ந்த பியட்ரோ பரோலின் (வயது 70), ஹங்கேரியை சேர்ந்த பீட்டர் எர்டோ (72), பிலிப்பைன்ஸை சேர்ந்த லூயிஸ் அன்டோனியோ டாக்லே (67), உள்பட 8 பேர் உள்ளனர்.

போப் தேர்தலில் இந்தியாவைச் சேர்ந்த பிலிப் நேரி பெராவ், பசேலியோஸ் கிளீமிஸ், அந்தோனி பூலா, ஜோர்ஜ் ஜேக்கப் கூவக்காட் ஆகிய 4 கார்டினல்கள் வாக்களிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க