புதிய கட்சியை ஆரம்பிக்கிறார் ரணில்!

புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இன்று (29) உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் உரையாற்றும் போது ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் இதுவரை செய்தவற்றில் மக்கள் திருப்தி அடையவில்லை, இது உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் 2.3 மில்லியன் வாக்குகள் இழந்ததன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கத்தின் வாக்குகள் அதிகரிக்க வேண்டும், ஆனால் இந்த முறை உள்ளூராட்சித்தேர்தலில் அரசாங்கம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது எனவும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களில் நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்து கடமைகளை ஏற்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் நாங்கள் விசேட பயிற்சி அளிப்போம். பிரதேச சபை உறுப்பினராகவும், கட்சி அமைப்பு விஷயங்களிலும் பணியாற்ற நாங்கள் பயிற்சி அளிப்போம்.

பாராளுமன்றத் தேர்தலில் பெறப்பட்ட 6.8 மில்லியன் வாக்குகளின் எண்ணிக்கை 4.5 மில்லியனாகக் குறைக்கப்பட்டது. அதாவது 2.3 மில்லியன் மக்கள் அரசாங்கத்திற்கு பொருத்தமான வாக்குகளை வழங்கவில்லை.

மேலும், நாங்கள் ஒரு புதிய கட்சியை ஆரம்பிப்போம். நான் அதை இந்தக் குழுவிடம் ஒப்படைக்கிறேன். அதைச் செய்ய முடியுமா இல்லையா என்பதைப் பார்க்க நாம் ஒரு காலக்கெடுவை வழங்க வேண்டும். நாம் மேலும் மேலும் புதிய முகங்களைக் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவித்தார்.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த