பாவனையிலிருந்து அகற்றும் பீப்பாய்களை குப்பைத் தொட்டிகளாக்கும் திட்டம்!

உலக சுற்றாடல் தினமான இன்று (05) சிபெட்கோ நிறுவனம் அகற்றும் பீப்பாய்களை தரப்படுத்தப்பட்ட குப்பைத் தொட்டிகளாக மாற்றி நாடு முழுவதும் விநியோகிக்கும் திட்டம்
முத்துராஜவெல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த திட்டத்தை சிபெட்கோ மற்றும் Clean Sri Lanka செயலகம் ஆகியவை இணைந்து செயல்படுத்தியுள்ளன.

இந்த குப்பைத் தொட்டிகள் உக்கும் பொருட்கள் மற்றும் பொலிதீனை தனித்தனியாக இடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சிபெட்கோ முதல் கட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 150 பீப்பாய்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் தேவைக்கேற்ப குப்பை மற்றும் பொலிதீனை இடக்கூடிய பீப்பாய்களை வழங்க அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

Clean Sri Lanka செயலகத்தின் பணிப்பாளர் இசுரு அநுராத மற்றும் Clean Sri Lanka செயலகம் மற்றும் சிபெட்கோ அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்து, முத்துராஜவெல பகுதியில் இன்று (05) மரம் நடுகை நிகழ்வொன்றையும் நடைமுறைப்படுத்தியது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஜே.ஏ.எஸ். ராஜகருணா, முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி மயுர நெத்திகுமாரகே, பதில் பிரதிப் பொது முகாமையாளர் சமந்த குணவர்தன, உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் Clean Sri Lanka செயலகத்தின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த