பாப்பரசர் தெரிவுக்கான இரண்டாம் நாள் வாக்களிப்பு ஆரம்பம்

புதிய பாப்பரசரைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாட்டின் இரண்டாவது நாள் இன்று ஆரம்பமாகியுள்ளது. 133 கத்தோலிக்க கார்டினல்கள் இரகசிய வாக்கெடுப்பு நடைபெறும் சிஸ்டைன் தேவாலயத்திற்குள் வாக்களிப்பிற்காகச் சென்றுள்ளனர்.

மாநாட்டின் முதல் நாளான நேற்று (7) சிஸ்டைன் தேவாலயத்தின் புகைபோக்கியில் இருந்து கறுப்பு புகை வெளியேறியது, இது மறைந்த பாப்பரசர் பிரான்சிஸுக்குப் பிறகு கார்டினல்கள் புதிய பாப்பரசரத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதைக் கறுப்புப் புகை குறிக்கிறது. புதிய பாப்பரசரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் தேவை.

பாரம்பரியத்தின் படி, புதன்கிழமை ஒரு சுற்று வாக்களிப்பு இடம்பெற்றது . அவ்வாக்களிப்பில் புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படாததையடுத்து வியாழன் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் நாட்களில் புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ஒவ்வொரு நாளும் நான்கு சுற்று வாக்களிப்பு இடம்பெறும்.

 

 

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்

donald-trump

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன – ட்ரம்ப்!

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை ஈரான் தனது அணு