கத்தோலிக்க திருச்சபை தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று முன்தினம் ( 21) நித்திய இளைப்பாறினார்.
இந்நிலையில் பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சரகம் நீக்கியுள்ளது.
“பாப்பரசர் பிரான்சிஸின் ஆன்மா சாந்தியடையட்டும். அவரது நினைவு ஒரு ஆசீர்வாதமாக இருக்கட்டும்” என்று வெளியிட்ட பதிவை இஸ்ரேல் நீக்கியுள்ளமை கத்தோலிக்க நாடுகளை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இதுவரை வெளிப்படையான எந்த இரங்கல் செய்தியும் வெளியிடவில்லை.
மறைந்த பாப்பரசர் பிரான்சிஸ் இஸ்ரேல் – காஸா போரை தொடர்ந்து விமர்சித்து வந்தார். காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் சென்றடைய வேண்டும் என்றும் தனது கடைசி ஈஸ்டர் செய்தியிலும் பாப்பரசர் பிரான்சிஸ் வலியுறுத்தினார். அதே நேரம் இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.