பாத்தியா எனும் இலங்கையின் காட்டு யானை சமீபத்தில் ஒரு கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்களில் இருந்து குணமடைந்து வந்த நிலையில் நிக்கவெரட்டிய,மணிகம பகுதியில் சுற்றித் திரிந்த குறித்த காட்டு யானையே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் அதற்கு சிகிச்சை அளிக்க இலங்கை இராணுவம் உதவியுள்ளது.
குறித்த யானைக்கு சிகிச்சை தொடங்கும் நோக்கில் 15வது இலங்கை பீரங்கிப் படை மற்றும் 9வது இலங்கை தேசிய காவல்படையைச் சேர்ந்த வீரர்கள், வனவிலங்கு அதிகாரிகள் ஆகியோர் அந்த பகுதியின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டனர் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது சம்பவ இடத்தில் உள்ள வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து இராணுவ வீரர்கள் யானையை மீட்டு சிகிச்சையளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.