பிரதான பாதைகளில் யாசகம் பெற்று கொண்டிருந்த மற்றும் பாதுகாப்பற்ற முறையில் பொருட்களை விற்பனை செய்த 21 சிறுவர்களை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.
சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் புலனாய்வு பணியகம், சிறுவர் மற்றும் பெண்கள் பணியக தலைமையகம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவை சமீபத்தில் பாதுகாப்பற்ற முறையில் சுற்றித் திரியும் சிறுவர்களை காவலில் எடுத்து முறையான பாதுகாப்பில் வைக்க சிறப்பு நடவடிக்கையை செயல்படுத்தின.
இதற்கமைய கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்திய, மற்றும் நுகேகொடை, கம்பஹா, பாணந்துறை, களனி, நீர்கொழும்பு, கல்கிசை,களுத்துறை, தங்காலை,அனுராதபுரம் ,கண்டி குருநாகல்,ரத்தினபுரி ,காலி மற்றும் மாத்தறை ஆகிய பொலிஸ் பிரிவுகளின் நெரிசலான பகுதிகளை உள்ளடக்கியதாக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவர்கள் தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.