பாடசாலைகளில் இடம்பெறும் பிரச்சினைகளை மூடிமறைக்ககூடாது!

வடக்கு மாகாண பாடசாலைகளில் நடைபெறுகின்ற பிரச்சினைகளை மூடிமறைக்கும் வகையில் பாடசாலைகள் செயற்படக்கூடாது என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களும் வழிகாட்டுதல் கலந்துரையாடல் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே ஆளுநர் நா.வேதநாயகன் இதனி கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

முறைப்பாட்டுப்பெட்டிகள்

அலுவலர்கள் மத்தி , மாகாணம் என்று பிரிந்து செயற்படாமல் எல்லோரும் எமது பிள்ளைகளே என்ற அடிப்படையில் செயற்படவேண்டும். எந்தவொரு விடயமும் பாதிப்பு ஏற்பட முன்னரே வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் தடுக்கப்பட வேண்டும்.

அதற்கு சிறுவர்களுடன் தொடர்புடைய சகல அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது அவசியம். கடந்த காலங்களில் கிராம மட்டத்தில் விழிப்புணர்வுக் குழுக்கள் சிறப்பாகச் செயற்பட்டன.

இப்போது அவை அருகிவரும் நிலையில் அவற்றை மீளவும் செயற்பாட்டு நிலைக்கு கொண்டு வரவேண்டியது அவசியம். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அத்துடன் பாடசாலைகளில் முறைப்பாட்டுப்பெட்டிகள் வைக்கப்படுதல் மற்றும் அதனைக் கண்காணித்து கையாளல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்

donald-trump

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன – ட்ரம்ப்!

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை ஈரான் தனது அணு