பாகிஸ்தான் தூதுவருடன் மஹிந்த சந்திப்பு!

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பஹீம் உல் அசீஸ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவை இன்று (22) மதியம் விஜேராமாவில் உள்ள அவரது உத்தியோகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது இலங்கைக்கு தேவையான நேரத்தில் ஆதரவளித்த பாகிஸ்தான் நெருங்கிய நட்பு நாடாகும். நாட்டில் போர் சூழ்நிலை நிலவிய மிகக் கடினமான காலங்களில் பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய ஆதரவின் காரணமாக விடுதலைப் புலிகளால், கொழும்பில் இருந்த அப்போதைய இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரைக் கொல்ல முயன்றனர். இருப்பினும் போதிலும் அந்த முயற்சி தோல்வியடைந்தது என்பதையும் நினைவுகூர்ந்தார்.

அதனையடுத்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் நமது நாட்டிற்கு தொடர்ந்தும் பாகிஸ்தான் வழங்கும் அதரவிற்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மதம், அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத் துறைகளில் தொடர்ந்து வலுப்பெறும் என்று நம்புவதாகவும். ஒரு பழைய நண்பரின் வருகை என் பழைய நினைவுகளை மீட்டுத் தந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்