பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா (ஓய்வு) மற்றும் பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் நவீத் அஷ்ரஃப் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வரும் பாதுகாப்பு உரையாடலுடன் இணைந்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த உரையாடலில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) ஜெயந்த எதிரிசிங்க, இலங்கை இராணுவத்தின் தலைமைப் பணியாளர் மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க, இலங்கை விமானப்படைத் தலைமைப் பணியாளர் ஏர் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர ஆகியோர் பாதுகாப்புச் செயலாளருடன் இணையவுள்ளனர்.