பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் இந்தியாவுக்கு எச்சரிக்கை!

சமீபத்தில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சௌத்ரி இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சௌத்ரி கூறியிருப்பதாவது:

இந்தியா ஏதேனும் தாக்குதலை நடத்தினால், அதற்கு வலுவான மற்றும் நன்கு சிந்திக்கப்பட்ட பதிலடி கொடுக்கப்படும். ‘தாக்குதல் நடைபெறும் இடத்தை இந்தியா தீர்மானிக்கும், ஆனால் அது எங்கு முடியும் என்பதை நாங்கள் தீர்மானிப்போம்’. தரைவழி, வான்வழி மற்றும் கடல்வழி என மூன்று முனைகளிலும் பதிலடி கொடுக்க பாகிஸ்தானின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை முழுமையாக தயாராக இருக்கிறது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா எப்படி ஒரு சில நிமிடங்களில் முடிவு செய்தது? தாக்குதல் நடந்த இடம் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து சுமார் 230 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது. இவ்வளவு கடினமான பாதை வழியாக யாராவது 10 நிமிடங்களில் அங்கு எப்படி அடைய முடியும்?’ இவ்வாறு அவர் கூறினார்.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்