பாகிஸ்தானியர்கள் என்று எங்களை அழைக்க வேண்டாம்!

பலுசிஸ்தான் இனி பாகிஸ்தானின் மாகாணம் அல்ல என்றும், விடுதலை பெற்றுவிட்டதாகவும் பலூச் தலைவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானின் தென்மேற்கு பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டாக போராடி வருகின்றனர்.

சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்ட நிலையில், பலூச் அமைப்பின் தலைவர் மிர் யார் பலூச் நேற்று தனது எக்ஸ் தளத்தில், ”1947 ஒகஸ்ட் 11ல் ஆங்கிலேயர் வெளியேறிய போதே நாங்கள் எங்கள் சுதந்திரத்தை அறிவித்து விட்டோம்.

இந்திய ஊடகங்களும், யூடியூபர்களும் இனி பலுசிஸ்தானை பாகிஸ்தானின் மாகாணமாக குறிப்பிட வேண்டாம்.

நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல, நாங்கள் பலுசிஸ்தானியர்கள். பலுசிஸ்தான் குடியரசாக எங்களை உலகம் அங்கீகரிக்க வேண்டும். பலுசிஸ்தானின் தூதரகத்தை டில்லியில் அமைக்க இந்தியா அனுமதி தர வேண்டும். ஐ.நா.வும் எங்களை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும்” என கூறி உள்ளார். இதைத் தொடர்ந்து பலுசிஸ்தான் குடியரசு என சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்