காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் ஐ.எஸ்.ஐ., சதி (பாக்., உளவு அமைப்பு) மற்றும் லஷ்கர் தீவிரவாதிகள், பாக்., இராணுவத்தினருக்கும் தொடர்புள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு படையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ்.ஐ., மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தான் இதில் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரம் தெரிய வந்துள்ளது. மேலும் இவர்களுக்கு பாகிஸ்தான் இராணுவமும் பின்புலத்தில் இருந்து உதவி புரிந்துள்ளது.
இந்த தாக்குதல் ஐ.எஸ்.ஐ.யின் உத்தரவின் பேரில் பாகிஸ்தானில் உள்ள இராணுவ தலைமையகத்தில் சதி திட்டமிடப்பட்டது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீவிரவாதிகளுடன் இராணுவத்தினர் தொடர்பில் இருந்தனர். பாகிஸ்தானிடமிருந்து வழிகாட்டுதலையும் நிதியையும் பெற்றுள்ளனர். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்தவர்கள். முக்கிய தீவிரவாதிகளான ஹாஷிம் மூசா மற்றும் அலி என்கிற தல்ஹா பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இரு தீவிரவாதிகளும் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர்கள். இவர்கள் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.