பஸ் விபத்துக்கு சாரதி காரணமா? – விசாரணைகள் தீவிரம்!

ரம்பொட – கெரண்டி எல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்துக்கான காரணம் சாரதியின் கவனயீனமா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து கொத்மலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

மேலும், 35 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த

download (32)

டொராண்டோவில் கடும் வெப்பம்!

டொராண்டோ (Toronto) நகரில் வெப்ப அலை தொடரும் நிலையில், டொராண்டோ மாவட்ட பாடசாலைகள் குழுமம் (TDSB) பெற்றோர்களுக்கு கடிதம் ஒன்றை