பல மில்லியன் ரூபாய் வாகன மோசடி தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் பல போலி பெயர்களைப் பயன்படுத்தி ஏராளமான குற்றங்களைச் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
அவர் பல மொழிகளைப் பேசக்கூடியவர் என்றும், அவர் ஓட்டும் வாகனங்களில் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ சின்னத்தை காட்சிப்படுத்தியபடி சுற்றித் திரிகிறார் என்றும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார், அவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்.
சந்தேக நபரின் பெயர் ரபீக் முகமது பாரிஸ், தேசிய அடையாள அட்டை எண் 761850466v மற்றும் பிறந்த திகதி 1976. 07.03 என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி: 0718591735, புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி: 0718596507